search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடிவிழா நடைபெறும் கோவில்களில் பக்தர்கள் கூட்டத்தில் நகை பறித்த 5 பெண்கள் கைது
    X

    ஆடிவிழா நடைபெறும் கோவில்களில் பக்தர்கள் கூட்டத்தில் நகை பறித்த 5 பெண்கள் கைது

    ஆடிவிழா நடைபெறும் கோவில்களில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து நகை பறித்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    கோயம்பேடு:

    திருமங்கலம், என்.வி.என். நகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நடந்த கூழ் ஊற்றும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோவிலில் தொழிலாளியாக வேலை பார்க்கும் செல்லம் என்ற பெண் அணிந்திருந்த செயினை மர்ம பெண் பறித்து தப்ப முயன்றார்.

    உஷாரான செல்லம் அந்த பெண்ணை மடக்கி பிடித்தார். உடனே கூட்டத்தில் நின்ற மேலும் 4 பெண்கள் தப்பி ஓட முயன்றனர். பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீஸ்காரர் ரவி ஆகியோர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி, முத்து, மீனா, பிரியா, சந்திரா என்பது தெரிந்தது.

    ஆடி மாதத்தையொட்டி அம்மன் கோவில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்து வந்ததை ஒப்புக்கொண்டனர். பெரியபாளையம் கோவிலில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய பின்னர் இங்கு வந்தது தெரிந்தது.

    கைதான 5 பெண்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    அம்பத்தூர் அல்லிகுப்பம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் சடச்சி (62). இவர் இன்று காலை வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் சடச்சி கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இது குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×