என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செஞ்சிக்கோட்டையில் இளம்பெண் கற்பழித்து கொலை: தனிப்படை போலீசார் விசாரணை
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் கல்யாண மஹாலுக்கு பின்புறம் மலைப்பகுதியில் கடந்த 23–ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
செஞ்சி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் பிணமாக கிடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் சண்முகம் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த பகுதியில் கிடந்த ஒரு ஜோடி செருப்பு, கவரிங் செயின் மற்றும் பெண்ணின் உள்ளாடை ஆகியவற்றை கைப்பற்றினர். பிணமாக கிடந்த அந்த பெண் யார்? எந்த ஊர் என்று விசாரித்தனர். இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் செஞ்சிக்கோட்டைக்கு வந்தார். இளம்பெண் பிணமாக கிடந்த இடத்தை பார்வையிட்டார்.
கோட்டையில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, இளம்பெண் சாவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இதுதொடர்பாக துப்பு துலக்க இன்ஸ்பெக்டர்கள் பூபதி, ஜோசப் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இறந்து போன பெண் யார்? என்ற விவரம் விரைவில் கண்டறியப்படும் என்றார்.
செஞ்சிக்கோட்டையில் பிணமாக கிடந்த பெண் யார்? அவரை கொன்ற கொலையாளிகள் யார் என்று கண்டறிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களில் காணாமல் போன பெண்கள் யார்? யார்? அவர்களின் புகைப்படங்கள் ஆகியவைகளை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
செஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண் டனர். அந்த பகுதிக்கு அடிக்கடி வருகின்றவர்கள் யார்? யார்? என்பது பற்றி கேட்டறிந்தனர்.
செஞ்சிக்கோட்டை பகுதியில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு செல்போனில் யார் அதிகம் பேசி இருக்கிறார்கள் என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.
செஞ்சிக்கோட்டை பகுதிக்கு காதல் ஜோடிகள் வருவது அதிகரித்து உள்ளது.
எனவே இளம்பெண்ணுடன் வந்த காதலனை அடித்து துரத்தி விட்டு மர்ம மனிதர்கள் அந்த இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
எனவே ரவுடிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்