என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவானைக்காவலில் கை, கால்களை கட்டி மூதாட்டி படுகொலை
திருச்சி:
திருச்சி திருவானைக்காவல் பேங்கர்ஸ் காலணியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ரமணியம்மாள் (வயது 80). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். கந்தசாமி இறந்து விட்டதால் ரமணியம்மாள் தற்போது திருவானைக்கா வலில் உள்ள தனது மகள் நிர்மலா வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமணியம்மாள் இடம் வாங்கிய வகையில் மகள் பத்திரப்பதிவு செய்வதற்காக ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் இருந்து எடுத்து தனது மகளிடம் கொடுத்துள்ளர்.
நேற்று நிர்மலா மற்றும் உறவினர்கள் அனைவரும் துறையூர் அருகே பத்திரப் பதிவு செய்வதற்காக முடிவு செய்தனர். ஆனால் ரமணியம்மாள் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மகள் உள்ளிட்டோரை மட்டும் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த ரமணியம் மாளை வீட்டின் உட்புற மாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு மகள் மற்றும் உறவினர்கள் பத்திர பதிவிற்காக புறப்பட்டு சென்றனர்.
பத்திரப் பதிவிற்கான பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு மீண்டும் இரவு 7 மணிக்கு மகள் நிர்மலா மற்றும் உறவினர்கள் திருவானைக்காவல் திரும்பினர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் திறந்திருந்தது.
இதானால் அதிர்ச்சியடைந்த நிர்மலா வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ரமணியம்மாள் கட்டிலின் மேல் கை, கால்கள் கட்டப்பட்டு வெள்ளை துண்டால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
உடனே இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த ரமணியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கை, கால்களை கட்டி வைத்து கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து பார்த்தால் யாராவது மர்ம நபர்கள் திருடுவதற்காக ரமணியம்மாளை கொலை செய்தார்களா? இல்லை சொத்து பிரச்சினை காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
கொலையாளிகளை பிடிக்க ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்