என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நிலக்கோட்டையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை டவுன் பகுதியில் சாத்தாவு கோவில் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறத்தில் பெண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் ஊருக்குள் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பால முருகன், நிலக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி சுருளியாண்டி, இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, தாசில்தார் காளிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பெண் பிணம் எரிந்த நிலையில் இருந்ததால் முகம் அடையாளம் தெரிய வில்லை. பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் பார்வதியம்மாள் (வயது 65). வெங்கடேஷ் என்பவரின் மனைவி. நிலக்கோட்டை பெரியகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இவரை யாராவது குடும்ப தகராறில் தீ வைத்து கொன்றனரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.