என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலத்தில் இன்று பரிதாபம்: கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி
கொண்டலாம்பட்டி:
சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் லட்சுமி காந்தன்(வயது 46). இவரது வீட்டில் மேல் மாடி அமைகும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிட பணியில் சின்னம்மா நாயக்கன் பாளையம், பேளூர் ரோட்டை சேர்ந்த ஜெயராமன் (45) மற்றும், அவரது உறவினர் செந்தில் (34) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
வழக்கம் போல் இருவரும் இன்று காலையில் கட்டிடம் பணியில் ஈடுபட்டனர். அப்போது பணி செய்வதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் ஏறி வேலை செய்யும் போது, ஜெயராமன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அம்மாப் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ஜெயராமனுக்கு மாரியம்மாள்(40) என்ற மனைவியும், ரவி, அய்யந்துரை, விஜய் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.