search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
    X

    பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

    புதுவையில், பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மடுகரையை சேர்ந்தவர் பாண்டுரங்கன், மத்திய அரசு ஊழியர். இவரது மகன் பிரசன்னகுமார் (வயது 20). பாலிடெக்னிக் கல்லூரியில், என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர், கல்லூரி செல்வதற்கு வசதியாக மோட்டார்சைக்கிள் வாங்கி தருமாறு பெற்றோரிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். எனினும் அவர்கள் இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுக்கவில்லை.

    இதனால் விரக்தியடைந்த பிரசன்னகுமார், வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    மடுகரை போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×