என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணி: ஜெயலலிதா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்23 July 2016 8:35 AM GMT (Updated: 23 July 2016 8:35 AM GMT)
சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் பணிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேடையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னை:
வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை ரூ. 3770 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டப்பணிகள் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை துறைமுக பொறுப்பு கழக பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலை 10.55 மணிக்கு வந்தார். அவரை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், துறையின் முதன்மை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மத்திய மத்திரி வெங்கையா நாயுடு வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜெயலலிதா வணக்கம் தெரிவித்தார். அதன் பிறகு 11 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வரவேற்றுப் பேசினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விழா மலரை வெளியிட்டார். அதை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடர்பான குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
அதில் கோயம்பேடு - ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
பின்னர் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் பணிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேடையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது மேடையில் இருந்த எல்.சி.டி. திரையில் ராட்சத எந்திரம் மூலம் பணிகள் தொடங்கும் காட்சிகள் ஒளிபரப்பானது. இதை அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர்.
அதன் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரையாற்றினார். அப்போது அவர் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தமிழகத்தின் உற்ற நண்பர் என்றும, தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெறுவதில் முன் நிற்பவர் என்றும் பாராட்டினார்.
மேலும் அடுத்த மாதம் சின்னமலை முதல் விமான நிலையம் வரையும், அக்டோபர் மாதத்தில் ஆலந்தூர் முதல் புனித தோமையர் வரையிலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும், 2017-ம் ஆண்டு இறுதிக்குள் மீதம் உள்ள பகுதிகளில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடும் என்றும், இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story
×