என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் சட்டப்பணிகள் ஆணைய மாநாடு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
தேசிய சட்டப்பணிகள் ஆணையம், புதுவை சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை மேம்படுத்துதல், எதிர்நோக்குதல், செயல்படுத்துதல் பற்றி சீராய்வு செய்ய தென்மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சட்டப்பணிகள் ஆணைய மாநாடு நடத்தப்படுகிறது.
புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் 2 நாட்கள் நடைபெறும் இந்த சீராய்வு மாநாட்டை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான அனில் ஆர். தவே குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மாநாட்டுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமை தாங்கினார். புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டில் சட்ட பணிகள் ஆணையத்தின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, லட்சத்தீவு, புதுவை மாநிலங்களின் செயல் தலைவர்கள், உறுப்பினர் செயலர்கள் பங்கேற்றனர்.