search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவரை தாக்கி கார் கடத்தல்: 4 பேர் கைது - 2 சொகுசு கார் பறிமுதல்
    X

    டிரைவரை தாக்கி கார் கடத்தல்: 4 பேர் கைது - 2 சொகுசு கார் பறிமுதல்

    பைபாஸ் சாலையில் டிரைவரை தாக்கி தொடர் கார் கடத்தல் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலும் அதனை யொட்டி உள்ள பகுதிகளிலும் தனியே சொகுசு காரை ஓட்டிச் செல்லும் டிரைவரை உருட்டுக் கட்டையால் தாக்கி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கார்கள் கடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தொடர் கார் கடத்தல் தொடர்பாக சென்னை செங்குன்றத்தை அடுத்து உள்ள பாலவாயில் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (35), திருத்தணியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் (41), மதன்குமார் (31) மற்றும் அலெக்ஸ்பாண்டியன் (34) ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×