என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து: 2 பேர் பலி
Byமாலை மலர்23 July 2016 5:27 AM GMT (Updated: 23 July 2016 5:27 AM GMT)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பதற்காக 79 அறைகள் உள்ளன.
இன்று (சனிக்கிழமை) காலை பணியாளர்கள் அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்கள் பட்டாசு தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தீ பக்கத்து அறைகளுக்கும் பரவ அந்த பகுதியை கரும்புகை சூழ்ந்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கண்ணகுரும்பன் பட்டியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் (வயது38), நக்கலமுத்தன்பட்டியை சேர்ந்த குருசாமி (63) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.
மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Next Story
×