search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருச்சியில் சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது
    X

    திருச்சியில் சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது

    திருச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை துரைசாமி புரம் மெயின் ரோடு அருகே சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த கீழப்புதூரை சேர்ந்த பழனி (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் கோட்டை மற்றும் பொன்மலை போலீசார் ரோந்து பணி சென்ற போது கோட்டை பெரிய கடை வீதி அருகே மற்றும் பொன்மலை புது பாலம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த திருச்சி வடக்கு தாரா நல்லூரை சேர்ந்த சசிக்குமார் (35), சுப்பிரமணிய புரம் புதுத்தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (42) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×