என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கோவையில் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
கோவை:
கோவை புலியகுளம் பெரியார் 3-வது வீதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 39). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
பிராங்கிளின் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார்.
இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் பிராங்கிளின் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று பிராங்கிளினுக்கு சாப்பாடு கொடுக்க அவரது மகன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்தது.
இதனால் அவரது மகன் திரும்பி சென்று விட்டார். இன்று காலையிலும் அவரது மகன் வீட்டுக்கு வந்தார். இன்றும் வீடு பூட்டி கிடந்ததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் குளியலறையில் தலை குப்புற பிராங்கிளின் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் தாய்க்கு தகவல் கொடுத்தார்.
இதனால் பிராங்கிளின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். மேலும் பூட்டிய வீட்டுக்குள் ஆட்டோ டிரைவர் மர்மமாக இறந்து கிடந்ததால் அப்பகுதி மக்களும் திரண்டு வந்து பார்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஆட்டோ டிரைவர் பிராங்கிளின் உடலில் காயங்கள் உள்ளது. இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.
பூட்டிய வீட்டுக்குள் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.