என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காவேரிப்பாக்கம் அருகே சென்னை லாரி டிரைவர் மர்ம சாவு
Byமாலை மலர்23 Jun 2016 12:01 PM IST (Updated: 23 Jun 2016 12:01 PM IST)
மணல் லாரி டிரைவர் ஏரியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அடித்துக்கொலை செய்து மர்ம நபர்கள் வீசி சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது42) மணல் லாரி டிரைவர். இவருக்கு எல்லம்மாள் (வயது38) என்கிற மனைவியும் அனுசுயா (வயது19), சசி (8) என்று 2 மகள்களும் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் டிப்பர் லாரியில் டிரைவராக கண்ணன் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி வாலாஜா அடுத்த பூண்டி மணல் குவாரிக்கு சென்ற இவர் காவேரிப்பாக்கம் அடுத்த வாணியன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5 மணிக்கு லாரியை நிறுத்தினார். பின்னர் அங்கு வழக்கமாக குளிக்கும் ஏரியில் குளித்துவிட்டு வருவதாக கிளீனர் ராமுவிடம் கூறி சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் திரும்பி வராததால், ஏரிக்கரை பகுதியில் ராமு தேடியுள்ளார். பின்னர் இது குறித்து லாரி உரிமையாளர் கோபாலுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், வாணியம் சத்திரம் ஏரியில் ஆண் உடல் மிதப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சிறப்பு சிப்பு சப்- இன்ஸ்பெக்டர் இன்பரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஏரியில் பிணமாக கிடந்தது கண்ணன் என்பது தெரிந்தது.
கண்ணனை முன் விரோதத்தில் யாராவது அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசி சென்றனரா? அல்லது ஏரியில் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×