என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
செல்போன் மூலம் மின்சார ரெயில் டிக்கெட் பெறுவது எப்படி? ரெயில் நிலையங்களில் இன்றுமுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்23 Jun 2016 10:16 AM IST (Updated: 23 Jun 2016 10:16 AM IST)
செல்போன் மூலம் மின்சார ரெயில் டிக்கெட் பெறுவது எப்படி என்று ரெயில் நிலையங்களில் இன்றுமுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
செல்போன் மூலம் மின்சார ரெயில் டிக்கெட் பெறும் வசதி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் எழும்பூர்-தாம்பரம் வழித்தடத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் இந்த வசதி படிப்படியாக மற்ற வழிதடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இணையதளம் வசதியுள்ள ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் செல்போன் மூலம் இந்த வசதியை பெற முடியும்.
ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள 5 கி.மீ. தூரத்திற்குள் வரும் போது மின்சார ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த 2015 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 281 பேரும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 696 பேரும் செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த டிக்கெட்டில் இது வெறும் 0.52 சதவீதமாகும்.
இந்த எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
அதன்படி இதற்கான விழிப்புணர்வு முகாம் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று தொடங்குகிறது. நாளை பெரம்பூர் நிலையத்திலும், 27-ந்தேதி ஆவடி, 28-ந்தேதி வேளச்சேரி, 29-ந்தேதி திருவான்மியூர், 30-ந்தேதி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் நடக்கிறது.
1-ந்தேதி திருவள்ளூரிலும், 4-ந்தேதி சென்னை சென்ட்ரல் புறநகர் நிலையத்திலும், 5-ந்தேதி கடற்கரை, 6-ந்தேதி தரமணி, 7-ந்தேதி தாம்பரம் நிலையத்திலும் முகாம் நடைபெறுகிறது.
8-ந்தேதி மாம்பலம், 11-ந்தேதி குரோம்பேட்டை, 12-ந்தேதி பூங்கா நகர் ரெயில் நிலையத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த முகாமின் போது டிக்கெட் முன்பதிவுக்கான செயலி (அப்) இலவசமாக பதிவிறக்கம் செய்து தரப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story
×