search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 162 இ-சேவை மையங்களிலும் மின்கட்டணம் செலுத்தலாம்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 162 இ-சேவை மையங்களிலும் மின்கட்டணம் செலுத்தலாம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 162 இ-சேவை மையங்களிலும் மின்கட்டணம் செலுத்தலாம் என மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 162 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கிராம ஊராட்சிகளில் 54 மையங்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலமாகவும், 103 மையங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 4 மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலமாக வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 1 மையம் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் சேவைகள் வழங்கி வருகின்றன.

    இச்சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதி உதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு இ-சேவை மையங்களின் மூலமாக மின்கட்டணமும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் செல்லாது, தங்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் சேவையை பயன்படுத்தி மின்கட்டணத்தை செலுத்தலாம். எனவே, பொதுமக்கள் அரசு இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×