என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் பேர் விபத்தில் பலியாகிறார்கள்: செங்குட்டுவன் எம்.பி.
வேலூர்:
டிராமா கேர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் (டி–கார்ஸ்) சார்பில் வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகாயத்திரி தேவி தலைமை தாங்கினார். டி–கார்ஸ் பொதுச்செயலாளர் டாக்டர் பிராங்கோ பெனடிக்ட் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:–
2020–ம் ஆண்டு இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். இதன் மூலம் இந்தியா அதிக வளர்ச்சியும், பெருமிதமும் அடையும்.
அதிக விபத்துகள் நடப்பதும் இந்தியாவில்தான். ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இந்தியாவில் சாலை விபத்தில் சாகிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக விபத்து நடக்கிறது. தமிழகத்தில் வேலூரில் தான் விபத்துகள் அதிகம்.
பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தான் விபத்துகள் நடக்கிறது. இதற்கு காரணம் சாலை சரியில்லாதது ஒன்று. இன்னொரு காரணம் இரு சக்கர வாகனங்களை இளைஞர்கள் கையாளும் விதம் ஆகும்.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கிறது. இதனால் தான் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஈ.வே.ரா. நாகம்மை பள்ளிக்கு எல். இ.டி. விளக்கு அமைக்கவும், 100 செட் மேஜை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் இங்கு ரெஸ்ட் ரூம் இல்லை. அமைத்து தரவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தனர். ரூ. 10 லட்சம் செலவில் இதனை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.