என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரிப்பு: சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு 3 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்7 Jun 2016 11:08 AM GMT (Updated: 7 Jun 2016 11:09 AM GMT)
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரித்த வழக்கில் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவருடைய மனைவி ரமாபாய். இவருக்கு நாகர்கோவில் பர்வதவர்த்தினி தெருவில் 19 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ரமாபாய் அதே தெருவை சேர்ந்த அரசன் பொன்ராஜ் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்தார்.
இந்த நிலையில் அரசன் பொன்ராஜ் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்ததாக ரமாபாய் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த 26.3.2011 அன்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அரசன் பொன்ராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உதயவேலவன் குற்றஞ்சாட்டப்பட்ட அரசன் பொன்ராஜூக்கு, போலி ஆவணங்கள் தயாரித்த குற்றத்துக்காக 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும், மற்றொரு பிரிவின் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை பெற்ற அரசன் பொன்ராஜ், சமத்துவ மக்கள் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×