என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பர்கூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
கிருஷ்ணகிரி:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகன்(29). இவர் சேலத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம் லாரி டிரைவராக பணி புரிந்துள்ளார். இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியில் மாங்காய் லோடு ஏற்றி வர சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சூர் என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலையில் இருந்த பள்ளத்தில் லாரி ஏறி இறங்கியதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்த லாரி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நீலமேகன் லாரியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்தகாயமடைந்த நீலமேகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.