search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரத்தில் கண்மாயில் மூழ்கி தொழிலாளி பலி
    X

    அவனியாபுரத்தில் கண்மாயில் மூழ்கி தொழிலாளி பலி

    அவனியாபுரத்தில் கண்மாயில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

    மதுரை:

    அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மணிமாறன், கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கண்மாயிக்கு குளிக்க சென்றார்.

    அப்போது கண்மாயில் ஆழமான பகுதிக்கு மணி மாறன் எதிர்பாராதவிதமாக சென்றுவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அங்கு தத்தளித்தார்.

    கண்மாயில் இருந்து மீள முடியாத அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து உடலை மீட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×