என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்7 Jun 2016 6:38 AM GMT (Updated: 7 Jun 2016 6:38 AM GMT)
பவானி அருகே அக்கா திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பவானி:
ஆப்பக்கூடல் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ஜெயபிரபு. இவரது மகள் ஸ்ரீமதி (வயது 26). மகன் பிரதீப் (21). இவர் டி என். பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரில் 3-ம்ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
ஸ்ரீமதி திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதையொட்டி உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வந்தது.
பிரதீப்பும் தனது அக்கா திருமணத்துக்கு வந்து கலந்து கொள்ளும்படி நண்பாகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.
இதற்காக நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். சித்தோடு பைபாஸ்ரோட்டில் அவர் செல்லும் போது அந்த வழியாக பின்னால் வந்த ஒரு வேன் பிரதீப் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பிரதீப் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதீப்பின் உடலை பார்த்து அவரது பெற்றோர், அக்கா ஸ்ரீமதி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story
×