search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபான ஆலை மேலாளரை கடத்திய மேலும் 2 பேர் கைது
    X

    மதுபான ஆலை மேலாளரை கடத்திய மேலும் 2 பேர் கைது

    திருவள்ளூர் அருகே மதுபான ஆலை மேலாளரை கடத்திய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயசங்கர். அரண்வாயல் குப்பத்தில் உள்ள தனியார் ‘பீர்’ கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவர் கடந்த 27-ந்தேதி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது 2 வாலிபர்கள் பைக்கில் வந்து வழிமறித்து தாக்கினர்.

    அப்போது காரில் வந்த மேலும் 3 பேர் விஜயசங்கரை கடத்தினர். அவரை சரமாரியாக தாக்கி ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர்.

    பின்னர் அவர் அணிந்து இருந்த 6 பவுன் செயின், 2 மோதிரத்தையும் பறித்து கொண்டனர். ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு அவரை கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு பைக், காரில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் கடத்தலில் ஈடுபட்ட மணவாளநகர் சேர்ந்த சதாம்உசேன், ஒண்டிக்குப்பம் சரவணன், ராமாபுரம் ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஒண்டிக்குப்பம் கே.கே.நகரை சேர்ந்த அபித் முகமது, கர்நாடகாவை சேர்ந்த குரு என்ற நட்ராஜன் ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் இருவரும் ஒண்டிக்குப்பத்தில் பதுக்கி இருந்த போது போலீசில் சிக்கினர்.

    விஜயசங்கரை கடத்த இந்த கும்பலுக்கு 2 பெண்கள் தகவல்களை அளித்து உதவி செய்துள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×