search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
    X

    மருத்துவ படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

    மருத்துவ படிப்பில் சேர இதுவரை 24 ஆயிரம்பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வந்து சேர இன்று கடைசி நாள்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த வருடமும் நுழைவுத்தேர்வு இன்றி கலந்தாய்வு நடைபெறுகிறது.

    சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 6 உள்ளன. இந்த கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 470 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 290 இடங்களும் உண்டு.

    கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களையும் சேர்த்து மருத்துவ இடங்கள் மொத்தம் 2 ஆயிரத்து 750 இடங்கள் உள்ளன.

    சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 17 இருக்கின்றன. அந்த கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பில் சேர மாநில ஒதுக்கீட்டில் 970 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 640 இடங்களும் உள்ளன.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மாதம் 26-ந்தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதுவரை 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் பெற்றுள்ளனர். நேற்று வரை விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அவை வந்து சேர இன்று கடைசி நாள்.

    தரவரிசை பட்டியல் 14-ந்தேதி வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த தகவலை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

    Next Story
    ×