என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செய்யாறு அருகே மகன் பள்ளிக்கு செல்லாததால் மனமுடைந்த தாய் தற்கொலை
வெம்பாக்கம்:
செய்யாறு அடுத்த தூசி அருகே உள்ள சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் பசீர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஷாஹிரா (36). இவர்களது மகன், அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மகன் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம் பிடித்ததால், ஷாஹிரா மனம் முடைந்து காணப்பட்டார். மகனிடம் ‘‘நீ பள்ளிக்கு செல்லவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்’’ என தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
ஆனால், அவருடைய மகன் அதற்கும் அசரவில்லை. படிப்புக்கு முட்டுக்கட்டை போடுவதில் மட்டுமே திட்டவட்டமாக இருந்தார். இதனால் விரக்தியடைந்த ஷாஹிரா மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாஹிரா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.