என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொலை வழக்கில் மகன் கைது: சுடுகாட்டில் கணவன்–மனைவி தற்கொலை
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த பெருகவாழ்ந்தான், பெருவிடைமருதூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது50). விவசாயி. இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களது மகன் தினேஷ்.
கடந்த 2015–ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த விக்டோரியா என்ற பெண்ணை தினேஷ் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் வெளியூரில் தங்கி உள்ளார். கொலை வழக்கில் மகன் தினேஷ் சிறைக்கு சென்றதில் இருந்து அவரது பெற்றோர் மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை இதனால் விரக்தியடைந்த கணவன்–மனைவி இருவரும் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து விட்டு அங்கேயே படுத்து விட்டனர்.
இருவரையும் காணாமல் அவரது உறவினர்கள் தேடியபோது 2 பேரும் சுடுகாட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் உடல்களை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.