என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த 48 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: சென்னையில் மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்6 Jun 2016 7:57 AM GMT (Updated: 6 Jun 2016 7:57 AM GMT)
தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை:
தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும். இந்த ஆண்டு 5 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூரில் 8 செ.மீ. மழை அதிகபட்சமாக பெய்துள்ளது. வேதாரண்யம், செட்டிகுளம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பரவலாக பெய்யும்.
சென்னையில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தென்மேற்கு பருவமழை வெப்பத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×