search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனத்தில் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சாம்பல்
    X

    திண்டிவனத்தில் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சாம்பல்

    திண்டிவனம் அருகே தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    திண்டிவனம்:

    விழுப்புரம் வட்டம் திண்டிவனம் பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்தவர் தனபால் (வயது 65). இவரது மகன்கள் சிவா, சக்தி. மகள் சிவசங்கரி. இவர்கள் அனைவரும் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனபால் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அருகில் உள்ள சிவா, சக்தி, சிவசங்கரி மற்றும் சரவணன் ஆகியோர் வீட்டிற்கும் பரவியது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். அவர்களது முயற்சிக்கு பலன் இல்லை. எனவே திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 5 வீடுகளும் அங்கிருந்த பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என தெரிகிறது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×