search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரியாபட்டி அருகே தி.மு.க. நிர்வாகி கொலை: அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரின் தம்பி உள்பட 13 பேர் கைது
    X

    காரியாபட்டி அருகே தி.மு.க. நிர்வாகி கொலை: அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரின் தம்பி உள்பட 13 பேர் கைது

    தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரின் தம்பி உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. மேற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்த இவருக்கும், மாந்தோப்பு பஞ்சாயத்து தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான சரவணனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சட்டமன்ற தேர்லில் இவர்களது முன்விரோதம் அதிகமானது.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி சரவணன் தரப்புக்கும், குருமூர்த்தி தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் குருமூர்த்தி உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து மல்லாங்கிணறு போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து சரவணன் உள்பட 24 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    மாந்தோப்பு கிராமத்தில் மோதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு கிராமத்தில் பதுங்கி இருந்த அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் சரவணனின் தம்பி அழகர் என்ற ராமச்சந்திரன் (வயது 27), மணிகண்டன் (35), நாராயணன் உள்ளிட்ட 13 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சரவணனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×