search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் புதிதாக கூட்டணியில் யாரையும் சேர்க்கமாட்டோம்: இல.கணேசன் பேட்டி
    X

    உள்ளாட்சி தேர்தலில் புதிதாக கூட்டணியில் யாரையும் சேர்க்கமாட்டோம்: இல.கணேசன் பேட்டி

    உள்ளாட்சி தேர்தலில் புதிதாக யாரையும் கூட்டணி சேர்க்க மாட்டோடம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்
    சிவகாசி:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 24, 25-ந்தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பழனியில் நடைபெற உள்ளது. சமீபத்தில் சென்னையில் கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அதில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் புதிதாக யாரையும் கூட்டணியில் சேர்க்க மாட்டோம்.

    2011 தேர்தலைவிட இந்த சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே உள்ளாட்சி தேர்தலை நம்பிக்கையுடன் எதிர் கொள்வோம்.

    சீன பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு தொழில் பாதிக்கப்படுவதாக இங்குள்ள தொழில் அதிபர்கள் மனு கொடுத்துள்ளனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதால், சீன பட்டாசுகள் இறக்குமதி தடுக்கப்பட்டு உள்ளது. சீன பட்டாசு இந்தியாவில் நுழைய மத்திய அரசு அனுமதிக்காது.

    சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×