search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பட்டுக்கோட்டையில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆய்வு
    X

    பட்டுக்கோட்டையில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆய்வு

    பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையன் அப்பகுதியை சேர்ந்த பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, அதிராம்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 36–க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 196 வாகனங்களை ஆய்விற்காக வரவழைத்து உச்சநீதிமன்றம் மற்றும் பள்ளிவாகனங்களுக்கான வாகன விதிமுறைகள் படி வாகனத்தின் அமைப்பு, வண்ணங்கள், ஏறி இறங்கும் வழிகள், கதவுகள், படிக்கட்டுகள் குழந்தைகள் ஏறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், ஓட்டுநர் இருக்கை, மாணவ, மாணவிகள் இருக்கை, புத்தகபைகள் வைக்கும் இடம், வாகனத்தின் தளங்கள், பாதுகாப்பான ஜன்னல்கள், அவசர வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவிகள் மற்றும் மிக அவசியமான வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன, 196 வாகனங்களில் ஆய்விற்கு 135 வாகனங்கள் வந்தன.

    அதில் 22 வாகனங்கள் அவசரவழி உள்ளிட்ட சில காரணங்களால் தகுதி சான்று மறுக்கப்பட்டது. முன்னதாக அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் அவர்களின் பணியின் முக்கிய அம்சம் பற்றி விளக்கப்பட்டது. மீதமுள்ள வாகனங்கள் தொடர்ந்து ஆய்விற்கு உட்படுத்தப்படும் என ஆய்வாளர் கூறினார்.

    Next Story
    ×