என் மலர்
செய்திகள்

தேனி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை
கம்பம்:
கோடை வெயிலின் உச்சமான அக்னிநட்சத்திர வெப்பத்தால் தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யகூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிகாலையிலும் மாலையிலும் மட்டுமே பிரசாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. பகலில் லேசான மழையும் மாலையில் சாரலுடன் தொடங்கிய மழை இரவு வரையும் நீடித்தது. இதனால் கடந்த பல நாட்களாக நீடித்து வந்த வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோடை மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விவசாய பணிகளை தொடங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110.10 அடியாக உள்ளது. நீர்வரத்து 16 கன அடி. திறப்பு 200 கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 31.07 அடி. வரத்து 89 கன அடி. திறப்பு 60 கன அடி. மஞ்சளாறு நீர்மட்டம் 33.50 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 84.13 அடி.
கூடலூர் 1, சண்முகாநதி அணை 13, உத்தமபாளையம் 15, வீரபாண்டி 69, வைகை அணை 1.2, மஞ்சளாறு 40, மருதாநதி 75, சோத்துப்பாறை 72, கொடைக்கானல் 64.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






