என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விளாத்திகுளத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் பறித்த 2 பெண்கள் கைது
  X

  விளாத்திகுளத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் பறித்த 2 பெண்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 1-ந்தேதி விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்த பால்சாமி என்பவரின் மனைவி முத்துச்செல்வி(வயது 52) கோவில்பட்டி பேருந்தில் ஏறும்போது மணி பர்ஸ் உடன் ரூ.10 ஆயிரம் காணாமல் போனது குறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • விளாத்திகுளம் போலீசார், பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது பேருந்தில் ஏறும் போது பின்னால் வந்த இரண்டு பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி முத்துலட்சுமி மணி பர்சை திருடியது தெரியவந்தது.

  எட்டயபுரம்:

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில், கடந்த 1-ந்தேதி விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்த பால்சாமி என்பவரின் மனைவி முத்துச்செல்வி(வயது 52) கோவில்பட்டி பேருந்தில் ஏறும்போது மணி பர்ஸ் உடன் ரூ.10 ஆயிரம் காணாமல் போனது குறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திய விளாத்திகுளம் போலீசார், பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது பேருந்தில் ஏறும் போது பின்னால் வந்த இரண்டு பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி முத்துலட்சுமி மணி பர்சை திருடியது தெரியவந்தது.

  இதனையடுத்து சி.சி.டி.வி ஆதாரங்களுடன் மணி பர்சை திருடிய தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்த சத்யா (35) மற்றும் சந்தனமாரி (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


  Next Story
  ×