search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை வ.உ.சி. மைதானத்தில்  2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி
    X

    பாளை வ.உ.சி. மைதானத்தில் யோகா பயிற்சியில் பங்கேற்றவர்கள்.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி

    • பாளை சேவியர் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.சி.சி. மாணவர்கள்.
    • சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று நெல்லையில் பல்வேறு பள்ளிகள், விளையாட்டு மைதானத்தில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று நெல்லையில் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், வன காப்பாளர் ஹேமலதா பங்கேற்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் யோகாசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 7 மணி வரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் நேரு யுவகேந்திரா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட யோகாசான சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த யோகாசனத்தில் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட யோகாசன சங்க செயலாளர் அழகேசராஜா வரவேற்றார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானசந்திரன் தொடக்க உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்க–ளாக மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட உதவி வன காப்பாளர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காலை 6 மணிக்கே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்வமுடன் மைதானத்திற்கு வந்தனர். தன்னார்வல்கள் மற்றும் சில பள்ளிகளில் இருந்து மொத்தமாகவும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கலந்து கொண்டு பலவகையிலான யோகாசனத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர்கள் சிவசங்கர், அமல் தாமஸ் மற்றும் மிதார் முகைதீன், பாத்திமா, மரியசூசை உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் தேசிய இளைஞர் தன்னார்வலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×