என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு
  X

  உண்டியல் திருடப்பட்ட மாரியம்மன் கோவில் திருடப்பட்ட கோவில் உண்டியல் தோட்டத்தில் கிடந்த போது எடுத்தபடம்.

  கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமகிரிபேட்டை அருகே உள்ள ஒண்டிக்கடையில் மாரியம்மன் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பேர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்தனர்.

  ராசிபுரம்:

  நாமகிரிபேட்டை அருகே உள்ள ஒண்டிக்கடையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பேர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை தூக்கி சென்று ஈஸ்வரமூர்த்திபாளையம் அருகேயுள்ள விவசாயி ஒருவரது தோட்டத்தில் வைத்து உடைத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடி விட்டான். பிடிபட்ட இருவரையும் மங்களபுரம் போலீசில் ஒப்படைத்தனர். மங்களபுரம் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பிறகு அவர்கள் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த குமார் மகன் சர்மா (24) இன்னொருவர் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 25), கைது செய்யப்பட்ட சர்மா (24) மற்றும் சீனிவாசன் இருவரையும் போலீசார் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிறகு அவர்கள் இருவரையும் ராசிபுரம் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×