search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சதீஷ்குமார் மற்றும் பாண்டி.

    திண்டுக்கல் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்களிடமிருந்து 13,600 கிலோ ரேசன் அரிசயையும் பறிமுதல் செய்தனர்.
    • ரேசன் அரிசி கடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது27), கலைமகள் காலனியை சேர்ந்தவர் பாண்டி (38). இவர்கள் 2 பேரும் சேர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுவ தாக புகார் வந்தது.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் சதீஷ்குமார் மற்றும் பாண்டியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13,600 கிலோ ரேசன் அரிசயையும் பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.பி. பாஸ்கரன், ஏ.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் காவல்துறை இயக்குனர் அபாஸ்கு மாருக்கு பரிந்துரை செய்த னர். இந்த பரிந்துரையை டி.ஜி.பி. மற்றும் கலெக்டர் விசாகனுக்கு அனுப்பி வைத்தார்.

    அதனை ஏற்று கலெக்டர் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சிறையில் இருந்த சதீஷ்குமார் மற்றும் பாண்டி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

    Next Story
    ×