என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போடியில் கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது
  X

  கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.

  போடியில் கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போடி உலக்குருட்டி வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
  • கடமான்களை வேட்டையாடிய 2 பேரை கைது செய்து 40 இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

  போடி:

  போடி வனப்பகுதியில் மான் வேட்டை நடப்ப தாக வந்த தகவலை அடுத்து வனச்சரகர் செந்தில்குமார், வனவர் செல்வராஜ், வனக்காவலர் காளிரத்தினம் ஆகியோர் போடி உலக்குருட்டி வன ப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னப்பாலம் வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்து அங்கு சென்றபோது 4 பேர் பைகளுடன் மறைந்தி ருந்தது தெரிய வந்தது.

  அவர்களை பிடிக்க முயற்சித்த போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் போடி குப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னன் மகன் சூரியபிரகாஷ் (வயது43), பெரியகருப்பன் மகன் சிவக்குமார் (39) என்பது தெரிந்தது. இவர்கள் இருவரும் மருதுபாண்டி மற்றும் சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து கடமான்களை வேட்டையாடி அதன் இறைச்சியை வைத்திருந்தனர்.

  இதையடுத்து 4 பேர் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சூரியபிரகாஷ், சிவக்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 40 கிலோ கடைமான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×