என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதியவரை தாக்கி வீட்டுக்கு தீ வைத்த 2 பேர் கைது
  X

  கோப்பு படம்

  முதியவரை தாக்கி வீட்டுக்கு தீ வைத்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிக ஓசையுடன் ரேடியோவில் பாட்டு வைத்ததை தட்டிகேட்ட முதியவரை தாக்கி அவரது வீட்டுக்கும் 2 வாலிபர்கள் தீ வைத்தனர்
  • சாணார்பட்டி போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் பெனடிக்லூயிஸ்(60). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

  இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த கவிபாரதி(21), ஜோசப் ஆரோக்கியம்(22) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  அதிக ஓசையுடன் ரேடியோவில் பாட்டு வைத்ததால் பெனடிக் லூயிஸ் அவர்களை கண்டித்து வந்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர்கள் 2 பேரும் பெனடிக்லூயிசை கடுமையாக தாக்கினர்.

  மேலும் அவரது வீட்டிற்கும் தீ வைத்தனர். இதில் வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவுசெய்து கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

  Next Story
  ×