search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் இதுவரை அரசு பஸ்களில் 173 கோடி பெண்கள் இலவச பயணம்
    X

    தமிழகத்தில் இதுவரை அரசு பஸ்களில் 173 கோடி பெண்கள் இலவச பயணம்

    • இலவசமாக பெண்கள் பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும்.
    • இத்திட்டத்தால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை.

    சென்னை :

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, 'கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் அரசு பஸ்களில் இதுவரை 173 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

    மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பஸ் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாதபடி, பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலை உள்ளதால் பஸ்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

    Next Story
    ×