search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு
    X

    தமிழக அரசு

    மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

    • அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம்தோறும் ரூ.1000 உதவி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
    • ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மாதம் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 7-ம் தேதி முதல் வங்கிக்கணக்கல் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். இதற்காக அரசு ரூ. 698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×