என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செங்கோட்டை பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்- 2பேர் கைது
  X

  கைது செய்யபட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்கள்.
  செங்கோட்டை பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்- 2பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
  • சுடுகாடு அருகே 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.

  செங்கோட்டை:

  செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் தனி பிரிவு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது செங்கோட்டை காலாங்கரை சுடுகாடு அருகே 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

  இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் அவர்களை விரட்டிபிடித்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் செங்கோட்டை சங்கர பாண்டியன்.தெருவை சேர்ந்த பரமசிவன் (வயது 32), விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் (32) என்பது தெரிய வந்தது. அவர்கள் அந்த சுடுகாடு அருகே ரூ.3. லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பாைள சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×