என் மலர்

  செய்திகள்

  நடிகை ஜோதிலட்சுமி மரணம்
  X

  நடிகை ஜோதிலட்சுமி மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிளப் டான்ஸ் பாடல்கள் மற்றும் குணச்சித்திர நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்த பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி சென்னையில் காலமானார்.
  1963-ம் ஆண்டு எம்.ஜி.அர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானவர், ஜோதிலட்சுமி. பின்னாளில் 1970-ம் ஆண்டுவாக்கில் பல படங்களில் நடனப் பெண்ணாகவும், வில்லியாகவும், தேடி வந்த மாப்பிள்ளை, தலைவன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.

  குறிப்பாக, அடிமைப் பெண் படத்தில் வரும் ‘காலத்தை வென்றவன் நீ’, ‘பெரிய இடத்துப் பெண் படத்தில் இடம்பெற்ற ‘கட்டோடு குழலாட, ஆட’ போன்ற இன்றளவும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் பாடல் காட்சிகளில் தோன்றும் ஜோதிலட்சுமி, பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றும், சில தெலுங்கு படங்களில் ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ ஆகவும்
  திறம்பட நடித்திருந்தார்.

  1980-ம் ஆண்டுவாக்கில் இவரது தங்கை ஜெயமாலினி தென்னிந்தியப் படங்களில் நடன காட்சிகளில் அறிமுகமான பின்னர் ஜோதிலட்சுமியின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. எனினும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சுமார் 300 படங்களில் அவர் நடித்திருந்தார்.

  இந்நிலையில், ஜோதிலட்சுமிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.

  மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடக்கிறது.
  Next Story
  ×