என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரண்டே வாரங்களில் ரூ.534 கோடி: சல்மான் கானின் சுல்தான் அபார வசூல் சாதனை
Byமாலை மலர்23 July 2016 9:53 AM GMT (Updated: 23 July 2016 9:53 AM GMT)
உலகளாவிய அளவில் திரையிடப்பட்ட இரண்டே வாரங்களில் 534 கோடி ரூபாயை வசூலித்து சல்மான் கானின் ’சுல்தான்’ வசூலில் அபார சாதனை படைத்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.
ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.
முதல் நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன் மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்தது.
விரைவில், உலகளாவிய பாலிவுட் பட வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் “தூம் 3” (ரூ.542 கோடி) என்ற இலக்கையும் கடந்து பல்வேறு புதிய சாதனைகளை ’சுல்தான்’ உருவாக்கும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி ரிலீசான இரண்டே வாரங்களில் இந்தியாவில் மட்டும் 388.96 கோடி ரூபாயும், இதர உலக நாடுகளில் 21.5 மில்லியன் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்புக்கு சுமார் 145 கோடி ரூபாய்) வசூலித்ததன் மூலமாக உலகளாவிய அளவில் 534 கோட் ரூபாயை சுல்தான் வசூலித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் ‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையான 542 கோடி ரூபாயை சுல்தான் முறியடித்துவிடும் என்றும் யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Next Story
×