search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைக்குடன் சேர்த்து அதில் உட்கார்ந்தவரையும் தூக்கிய டிராஃபிக் போலீஸ் - வீடியோ
    X

    பைக்குடன் சேர்த்து அதில் உட்கார்ந்தவரையும் தூக்கிய டிராஃபிக் போலீஸ் - வீடியோ

    புனேவில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை அப்புறப்படுத்திய போக்குவரத்து காவல் துறையினர் அதன் மீது உட்காந்தவரையும் சேர்த்து தூக்கிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
    புனே:

    இந்தியாவில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்துவது வழக்கமான காரியம் தான். எனினும் வாகனத்துடன் சேர்த்து அதன் மீது உட்காந்து இருந்தவரையும் சேர்த்து போலீசார் அப்புறப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    புனேவின் விமன் நகரில் பகுதியின் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை அதன் உரிமையாளருடன் போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தும் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    மார்ச் 30-ம் தேதி விமன் நகரில் நடைபெற்றிருக்கும் சம்பவத்தில், சாலையில் தவறான இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும் படி கூறியதால் போலீசாருடன் நடைபெற்ற வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போலீசார் வாகனம் மற்றும் இளைஞரையும் சேர்த்து அப்புறப்படுத்தும் வாகனத்தில் ஏற்றியிருக்கின்றனர்.



    பின் சிறிது தூரம் சென்றதும் இளைஞரை போலீசார் இறக்கிவிட்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் மோட்டார்சைக்கிள் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    “இது போன்ற நடவடிக்கை முற்றிலும் தவறு. இதுகுறித்து பதில் அளிக்க சம்பவ இடத்தில் இருந்த துணை ஆய்வாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட இளைஞரின் பைக் அது கிடையாது. மேலும் காவல் துறையினருடன் இளைஞர் தவறாக நடந்து கொண்டதாக துணை ஆய்வாளர் என்னிடம் தெரிவித்தார்.” என போக்குவரத்து ஆய்வாளர் பி,ஜி. மிசல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அஜின்கியா ரிக்ஷா நிறுவனத்தை சேர்ந்த நிதின் புஜ்பல் கூறும் போது, பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகள் பெரும்பாலும், பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்றார். மேலும் போலீசார் பொது மக்களுக்கு உரிய மறியாதை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    காவல் துறையினர் மோட்டார்சைக்கிள் மற்றும் அதன் மீது அமர்ந்து இருப்பவரையும் சேர்த்து தூக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    Next Story
    ×