search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை... மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை

    தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர்களின் ரத்த உறவுகள் யாரும் முதல்வர் ஆனதில்லை.
    தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 1952-ல் ராஜாஜி (1952-1954) தமிழகத்தின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின் 1954 முதல் 1957 வரையும், 1957 முதல் 1962 வரையும், 1962 முதல் 1963 வரையிலும், பக்தவத்சலம் 1963 முதல் 1967 வரையிலும், அண்ணாதுரை 1967 முதல் 1969 வரையிலும் பதவி வகித்தனர்.

    அதன்பின் கருணாநிதி 1969 முதல் 1971 வரையிலும், 1971 முதல் 1976 வரையிலும், எம்.ஜி.ஆர் 1977 முதல் 1980 வரையிலும், எம்.ஜி.ஆர். 1985 முதல் 1987 வரையிலும், 1985 முதல் 1987 வரையிலும் முதலமைச்சராக இருந்தனர்.

    ஜானகி 7-1-1988 முதல் 30-1-1988 வரையிலும், கருணாநிதி 27-1-1989 முதல் 30-1-1991 வரையிலும் முதலமைச்சராக இருந்தனர்.

    ஜெயலலிதா 1991 முதல் 1996 வரையிலும், கருணாநிதி 1996 முதல் 2001 வரையிலும், ஜெயலலிதா 14-105- 2001 முதல் 21-9-2001 வரையிலும், ஓ. பன்னீர் செல்வம் 21-9-2001 முதல் 1-3-2002 வரையிலும், ஜெயலலிதா 2-3-2002 முதல் 13-5-2006 வரையிலும் முதலமைச்சராக இருந்தனர்.

    கருணாநிதி

    கருணாநிதி 2006 முதல் 2011 வரையிலும், ஜெயலலிதா 16-5-2011 முதல் 27-9-2014 வரையிலும், ஓ. பன்னீர் செல்வம் 29-9-2014 முதல் 22-5-2015 வரையிலும், ஜெயலலிதா 30-05-2015 முதல் 21-5-2016 வரையிலும், ஜெயலலிதா 23-5-2016 முதல் 5-12-2016 வரையிலும், ஓ. பன்னீர் செல்வம் 6-12-2016 முதல் 15-2-2017 வரையிலும், எடப்பாடி பழனிசாமி 16-2-2017 முதல் 1-5-2021 வரையிலும் முதலமைச்சராக இருந்தனர்.

    தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு பெருமை கிடைத்துள்ளது. அதாவது, தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர்களின் ரத்த உறவுகள் யாரும் முதல்வர் ஆனதில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதன்மூலம், புதிய வரலாறு படைத்துள்ளது திமுக.
    Next Story
    ×