search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீதா ஜீவன்- அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்.
    X
    கீதா ஜீவன்- அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்.

    தூத்துக்குடிக்கு இரண்டு மந்திரிகள்: திருநெல்வேலி ஏமாற்றம்

    34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு இடம் கிடைத்துள்ளது.
    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்தது. திமுக தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தாண்டி 125-ல் வெற்றி பெற்றது. நாளை முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார்.

    இந்த நிலையில் 34 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலும், அவர்களுக்கான இலாகாக்களும் வெளியிடப்பட்டன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீதா ஜீவன் (சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை), திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை) இடம் பிடித்துள்ளனர்.

    ஆனால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வகாப், ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஆகியோர் வெற்றி பெற்றனர். 

    அனிதா ராதாகிருஷ்ணன் 2001-ல் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபோது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

    கீதா ஜீவன் திமுக 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது சமூல நலத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது அதே இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×