search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    பட்டியல் வெளியீடு: நாளை பதவி ஏற்றதும் மாலை முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழக முதல்வராக நாளை காலை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் புதிதாக பதவியேற்கும் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். 

    அமைச்சரவையில் இடம்பெறும் முதல்வர் உள்ளிட்ட 34 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறை வருமாறு:-

    1. முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின்

    2. நீர்வளத்துறை - துரைமுருகன்

    3. நகர்ப்புற வளர்ச்சித்துறை- கே.என்.நேரு

    4. கூட்டுறவுத்துறை - இ.பெரியசாமி

    5. உயர்கல்வித் துறை- க.பொன்முடி

    6. பொதுப்பணித்துறை - எ.வ.வேலு

    7. வேளாண்மை-உழவர் நலத்துறை - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    8. வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

    9. தொழில்துறை- தங்கம் தென்னரசு

    10. சட்டத்துறை - எஸ்.ரகுபதி

    11. வீட்டு வசதித்துறை - சு.முத்துசாமி

    12. ஊரக வளர்ச்சித் துறை - கே.ஆர்.பெரியகருப்பன்

    13. ஊரக தொழில் துறை - தா.மோ.அன்பரசன்

    14. செய்தித் துறை - மு.பெ.சாமிநாதன்

    15. சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை- பி.கீதா ஜீவன்

    16. மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை - அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

    17. போக்குவரத்து துறை- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

    18. வனத்துறை- கா.ராமச்சந்திரன்

    19. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை - அர.சக்கரபாணி

    20. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை - வி.செந்தில் பாலாஜி

    21. கைத்தறி மற்றும் துணிநூல் துறை - ஆர்.காந்தி

    22. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை- மா.சுப்பிரமணியன்

    23. வணிகவரி மற்றும் பதிவுத்துறை - பி.மூர்த்தி

    24. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - எஸ்.எஸ்.சிவசங்கர்

    25. இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை - பி.கே.சேகர்பாபு

    26. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை - பழனிவேல் தியாகராஜன்

    27. பால்வளத்துறை - சா.மு.நாசர்

    28. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை - செஞ்சி  கே.எஸ்.மஸ்தான்

    29. பள்ளிக்கல்வித்துறை- அன்பில் மகேஸ் பெய்யாமொழி

    30. சுற்றுச்சூல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை- சிவ.வீ.மெய்யநாதன்

    31. தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை- சி.வி.கணேசன்

    32. தகவல் தொழில்நுட்பத்துறை- த.மனோ தங்கராஜ்

    33. சுற்றுலாத்துறை - மா.மதிவேந்தன்

    34. ஆதிதிராவிடர் நலத்துறை-என்.கயல்விழி செல்வராஜ்
    Next Story
    ×