search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஆட்சியமைக்க நாளை உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்

    தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக தலைவர் முகஸ்டாலின் உரிமை கோருகிறார்.
    சென்னை: 

    தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  நாளை மாலை 6.30 க்கு சந்தித்து ஆட்சிமைக்க முக ஸ்டாடலன் உரிமை கோருகிறார்.

    இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 7ந்தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சராக முகஸ்டாலின் பதவியேற்கிறார். ஒவ்வொரு அமைச்சருக்கும் 5 முதல் 8 பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும். மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×