search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோட்டா
    X
    நோட்டா

    நாமக்கல் மாவட்டத்தில் 116 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா

    தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 367 வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது தெரியவந்தது.
    நாமக்கல் :

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடந்தது. 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. கொ.ம.தே.க., அ.ம.மு.க., ம.நீ.ம., நா.த.க. மற்றும் சுயேச்சைகள் என 140 பேர் போட்டியிட்டனர். 6 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 367 வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது தெரியவந்தது.

    அதன்படி நாமக்கல் தொகுதியில் 1,285 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 2,110 வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,058 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. திருச்செங்கோடு தொகுதியில் 1,618 வாக்குகளும், பரமத்திவேலூர் தொகுதியில் 954 வாக்குகளும், குமாரபாளையம் தொகுதியில் 1,342 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்து உள்ளன.

    நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் 4 பேரும், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் 3 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் 4 பேரும் நோட்டாவை விட அதிகமான வாக்குகளை பெற்று உள்ளனர்.

    இதேபோல் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட 28 வேட்பாளர்களில் 4 பேருக்கும், பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்ட 27 வேட்பாளர்களில் 5 பேருக்கும், குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட 29 வேட்பாளர்களில் 4 பேருக்கும் நோட்டாவைவிட அதிக வாக்குகள் கிடைத்தன. மற்றவர்களை நோட்டா முந்தி உள்ளது. மொத்தம் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 பேரை, நோட்டா பின்னுக்கு தள்ளி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×