search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    ஆட்சியில் பங்கேற்க காங்கிரசுக்கு விருப்பமில்லை- ப.சிதம்பரம் சொல்கிறார்

    புதிய அரசை அமைக்க இருக்கும் தி.மு.க.விற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக ப சிதம்பரம் கூறியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

    தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்கள் கிடைத்தது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 18 இடங்கள் கிடைத்தது.

    இந்தநிலையில் ஆட்சியில் பங்கேற்க காங்கிரசுக்கு விருப்பம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கின்றன. தி.மு.க. தலைமையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி 3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

    புதிய அரசை அமைக்க இருக்கும் தி.மு.க.விற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஸ்டாலின்.

    ஆட்சியில் பங்கேற்பது காங்கிரசின் நோக்கம் அல்ல. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    Next Story
    ×