search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    15 நாளில் பிரசாரம் செய்து 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள்

    தேர்தல் அறிவிக்கப்பட்டு குறுகிய காலத்தில் தனிச் சின்னத்தை பெற்று பொதுமக்களிடம் அதனை எடுத்து சென்று மாபெரும் வெற்றியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 4 தனி தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் கூட, விடுதலை சிறுத்தைகள் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று ஆரம்பத்தில் இருந்தே கட்சி தலைவர் திருமாவளவன் கூறி வந்தார்.

    அதன்படி விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சின்னம் ஒதுக்கப்பட்டது.

    ஆனாலும் தனி சின்னத்தில் நிற்பதன் மூலம் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் களம் இறங்கியது.

    போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதில் 2 தொகுதி பொதுத்தொகுதி ஆகும். காட்டு மன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட்ட சிந்தனை செல்வன் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தார்.

    அதேபோல செய்யூர் (தனி) தொகுதியில் பனையூர் பாபு, நாகப்பட்டினம் (பொது) தொகுதியில் ஆலூர் ஷாநவாஸ் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர்களை பானை சின்னத்தில் போட்டியிட்டு தோற்கடித்தனர்.

    ஆலூர் ஷாநவாஸ்

    திருப்போரூர் (பொது) தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி பா.ம.க. வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    2011 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார், செல்வப் பெருந்தகை ஆகியோர் சட்டசபைக்கு சென்றனர். அதன்பின்னர் இந்த தேர்தல் வெற்றி மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்ல இருக்கின்றனர்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டு குறுகிய காலத்தில் தனிச் சின்னத்தை பெற்று பொதுமக்களிடம் அதனை எடுத்து சென்று மாபெரும் வெற்றியை விடுதலை சிறுத்தை கட்சி பெற்றுள்ளது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு கூடுதல் பலத்துடன் செல்ல உள்ளனர்.

    Next Story
    ×