search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரோஜா
    X
    சரோஜா

    ராசிபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியால் வீழ்ந்த சரோஜா

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு 88,775 ஓட்டுகள் கிடைத்தன.

    நாமக்கல்:

    அ.தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சராக இருந்த சரோஜா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் மதிவேந்தன், அ.ம.மு.க. சார்பில் அன்பழன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஜ.ஜே.கே. சார்பில் ராம்குமார், நாம் தமிழகர் கட்சி சார்பில் சிலம்பரசி மற்றும் சுயேட்சைகள் உள்பட 15 பேர் களத்தில் இருந்தனர்.

    கோப்புபடம்

    இதில் தி.மு.க. வேட்பாளர் மதிவேந்தன் 90,727 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சரோஜாவுக்கு 88,775 ஓட்டுகள் கிடைத்தன. ஓட்டு வித்தியாசம் 1952. இந்த தொகுதியில் நாம்தமிழர் கட்சி 11,295 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது. குறைந்த ஓட்டு வித்தியாசம் இருந்தாலும் நாம்தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகளால் சரோஜா தோல்வி அடைந்துள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 1051 வாக்குகள் பிடித்துள்ளார். இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தாலும் கூட சரோஜா வெற்றி பெற்றிருக்க கூடும் என அ.தி.மு.க.வினர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 

    Next Story
    ×